3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

3 மோட்டார் சைக்கிள்களை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-17 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40). இவர் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை கடை அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர், அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயச்சந்திரன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த செந்தில்வேல் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும், விழுப்புரம் ரெயில்வே கால்பந்தாட்ட மைதானம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எருமனந்தாங்கல் பகுதியை சேர்ந்த வினோத்குமாரின் மோட்டார் சைக்கிளையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகார்களின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடன்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்