அங்கன்வாடி மையத்தில் திருட்டு

அங்கன்வாடி மையத்தில் திருட்டு நடந்தது.

Update: 2023-09-22 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் டி.பி.மில் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அங்கன்வாடி பணியாளர் கதவை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையம் கதவு உடைந்த நிலையில் இருந்தது. அறையின் உள்ளே சென்று பார்த்தபோது எல்.இ.டி. டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சுடலைமுத்தம்மாள் தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்