வீரபத்திரன் சாமி கோவிலில் 22 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு

போச்சம்பள்ளி அருகே வீடுகளை பூட்டி விட்டு வீரபத்திரன் சாமி கோவிலில் 22 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-12-02 18:45 GMT

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே வீடுகளை பூட்டி விட்டு வீரபத்திரன் சாமி கோவிலில் 22 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வீரபத்திரன் சாமி கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பகுதியில் வீரபத்திரன் சாமி கோவில் உள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குறும்பர் இன மக்களின் குலதெய்வ கோவிலாக உள்ளது. இந்த இடத்தில் வீரபத்திர சாமியின் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலின் இரும்பு கேட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சாமிக்கு அணிவித்து இருந்த நகைகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த 22 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களை திருட்டு போனது தெரியவந்தது.

தடயங்கள் ஆய்வு

இதனிடையே நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலை சுற்றி உள்ள 5 வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, கோவிலில் புகுந்து நகைகளை திருடி சென்றது ெதரிந்தது. மேலும் சின்ராஜ் என்பவரின் வீட்டை உடைத்து அங்கிருந்து 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், வீட்டில் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசுக்கு பொதுமக்கள் தகவல் ெதரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏதேனும் தடயம் உள்ளதா? என போலீசார் செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். வீடுகளை பூட்டி விட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய இச்சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்