4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

ஜேடர்பாளையம் பகுதியில் 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் மளிகை பொருட்கள், செல்போன்களை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-04 17:09 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் பகுதியில் 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் மளிகை பொருட்கள், செல்போன்களை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடைகளில் திருட்டு

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். ஆனங்கூரை சேர்ந்தவர்கள் முத்துசாமி, செந்தில்குமார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை அவர்கள் கடைகளை திறக்க வந்தனர். அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

செல்போன்கள்

இதேபோல் பிலிக்கல்பாளையத்தில் அஜய் என்பவர் செல்போன் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடைகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள மளிகை கடையின் பூட்டையும் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் பூட்டு உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து கடை உரிமையாளர்கள் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ேஜடர்பாளையம் பகுதியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம், மளிகை பொருட்கள், செல்போன்கள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்