2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-07-26 18:19 GMT

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் பழமையான முருகன் கோவில், விநாயகர் கோவில் ஆகியவை உள்ளன. நேற்று காலை கிராமமக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முருகன் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகர் கோவிலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு கிராமமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் கோவில் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்