வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு போனது.;
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள பேச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 29). இவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்து அவர் ஊமச்சிகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த புகாரில் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் நகையை திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.