பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆலங்குடி அருகே வடகாடு சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்தவர் தங்கையா மகன் நந்தகுமார் (வயது 24). இவர், 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் நந்தகுமார் வீட்டிற்கு சென்று கேட்ட போது, சாதி பெயரை சொல்லி திட்டி, தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நந்தகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோவையில் பதுங்கி இருந்த நந்தகுமாரை கைது செய்து, ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.