வீடு புகுந்து பெண்களை தாக்கி விட்டு ஓடிய வாலிபர் கைது
வீடு புகுந்து பெண்களை தாக்கி விட்டு ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
வீடு புகுந்து பெண்களை தாக்கி விட்டு ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 77). சம்பவத்தன்று இவர் டி.வி.பார்த்துக்கொண்டிருந்தபோது அருகாமையில் உள்ளவர் வீட்டுக்கு வந்திருந்த ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கமல் (30) குடிபோதையில் புகுந்துள்ளார். அவரை எல்லையம்மாள் ஆபாசமாக திட்டி உள்ளார்.
வீட்டில் இருந்த எல்லையம்மாளின் மகள் ரெஜினாவும் கமலை கண்டித்து வெளியே போகச் சொல்லி சத்தம்போட்டார்.
ஆத்திரம் அடைந்த கமல் கீழேக்கிடந்த செங்கலால் இருவரையும் தாக்கி விட்டு ஓடினார். படுகாயம் அடைந்த எல்லையம்மாள், மகள் ரெஜினா ஆகிய இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கமல் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.