மின்வேலி அமைத்த தொழிலாளி கைது

மின்வேலி அமைத்த தொழிலாளி கைது

Update: 2023-07-22 20:30 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டி உள்ள நிலத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தோட்டத்துக்குள் வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வேலியை அமைத்த கூலி தொழிலாளி பாலச்சந்திரன்(வயது 48) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்