பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்த மரங்களை அகற்றும் பணி தொடங்கியது

பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்த மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2022-07-21 18:33 GMT

தக்கலை, 

பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்த மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

அகற்றும் பணி

பத்மநாபபுரம் அரண்மனையின் வெளிப்புறத்தை சுற்றிலும் கம்பீரமான கல்கோட்டை சுவர் உள்ளது. இந்த கோட்டையின் சுவரில் மரங்கள், செடிகள் வளர்ந்து நின்றது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழைக்கு பத்மநாபபுரம் ஆர்.சி.தெரு பக்கமுள்ள சுவரின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஏற்கனவே இடிந்த பகுதியின் அருகில் கோட்டை சுவரின் மீது வளர்ந்து நின்ற மரம் சுவரை பெயர்த்தபடி வேரோடு விழுந்தது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று மதுரை பொதுப்பணித்துறை ஹெரிட்டேஜ் பிரிவு மூலம் சேதம் அடைந்த கோட்டை சுவரை ஒட்டி வளர்ந்து நிற்கும் மரம், செடிகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. மரத்தின் வெட்டிய பகுதியில் இருந்து மீண்டும் துளிர் வராமல் இருப்பதற்கு களைக்கொல்லி மருந்தை தெளிக்க இருப்பதாக பணியை மேற்பார்வையிடும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே சமயத்தில் கோட்டை சுவரில் இருக்கும் மரம், செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்