ஜோலார்பேட்டை நகராட்சியில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது

ஜோலார்பேட்டை நகராட்சியில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது

Update: 2022-09-24 18:45 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சியில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை துறையின் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சியில் 500 மரக்கன்றுகளை நட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா இதனை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் காவியா விக்டர் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பழனி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கோபு, நகராட்சி மேலாளர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பழனி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். இதில் சோனியா அகாடமி சார்பில் நிர்வாகி ஐ.ஆஞ்சி மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்