கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-10 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிப்பதற்காக உளுந்தூர்பேட்டை ஆண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் வந்தார். அப்போது, அவர் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது, தன்னை செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் மகன் ராஜசேகர் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மாமனார் ரங்கராஜ், மாமியார் அஞ்சலை ஆகியோர் வாழவிடாமல் தொந்தரவு செய்கின்றனர்.

மேலும், என் மகனோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால் 50 பவுன் நகை மற்றும் கார் வாங்கித் தரவேண்டும் என வரதட்சனை கேட்டு, கணவரை எங்கோ மறைத்து வைத்துள்ளனர். எனவே எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்