புகையிலை விற்ற பெண் கைது

புகையிலை விற்ற பெண் கைது

Update: 2023-08-20 20:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் கிணத்துக்கடவு போலீசார் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெட்டிக்கடையை நடத்தி வந்த குட்டியம்மாள்(வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்