மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்

Update: 2023-10-22 00:22 GMT

கோபி அருகே உள்ள உக்கரம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண் மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சரசாள் (வயது 62) என்பதும், அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரசாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்