மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2023-08-06 18:45 GMT

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகம் அரசனூர் சமத்துவபுரம் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர். விசாரணையில் நாச்சத்தாள் (வயது 44) என்பவரது பெட்டிக்கடையில் 10 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நாச்சத்தாள் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்