கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
திருவிடைமருதூர்:
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை கஞ்சான்மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலன் (வயது75). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கோயம்புத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பழனிவேலன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் ராஜேஸ்வரியும் இறந்தார். சாவிலும் இணைபிரியாமல் இறந்த கணவர்-மனைவியால் அந்தபகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.