காட்டெருமையின் தாகம் தணித்த கிராம மக்கள்

தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமையின் தாகம் தணித்த கிராம மக்களை பாராட்டி வருகின்றனர்.

Update: 2023-08-27 23:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமம் உள்ளது. இங்கு படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் அடிக்கடி காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காட்டெருமை தண்ணீர் தேடி மிளிதேன் கிராமத்திற்குள் புகுந்தது. அந்த காட்டெருமை தினந்தோறும் தண்ணீர் தேடி சுற்றித்திரிவதை அறிந்த கிராம மக்கள், காட்டெருமையின் தாகத்தை போக்க ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி, அதன் அருகில் வைத்தனர். இதை பார்த்த காட்டெருமை யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல், தண்ணீரை குடித்து தாகத்தை தணித்தது. அதன் பின்னர் மீண்டும் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. காட்டெருமையின் தாகத்தை போக்க வாளியில் தண்ணீர் வைத்த கிராம மக்களை இயற்கை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்