ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்தது

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-01 19:51 GMT

ஏற்காடு

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த 21 பேர் நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு குப்பனூர் சாலை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். வேன், ஏற்காடு பெலாத்தூர் கிராமத்தை தாண்டி சென்ற போது திடீரென பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேன் டிரைவர் காட்பாடியை சேர்ந்த மோகன் (வயது 44) உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்