ஆரல்வாய்மொழி அருகேகாற்றாலையில் திருடியவர் கைது

ஆரல்வாய்மொழி அருகேகாற்றாலையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-29 22:27 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி குமாரபுரம் செல்லும் சாலை அருகே தனியார் காற்றாலை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 2 காற்றாலைகள் இயங்கி வந்தன. சம்பவத்தன்று காலையில் சென்று பார்த்தபோது ஒரு காற்றாலை ஓடாமல் இருப்பதை ஊழியர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது காற்றாலையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சி.டி.டிஸ்பிளே, கண்ட்ரோல்போர்டு, சுவிட்சு டிஸ்பிளே உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2½ லட்சம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி காற்றாலை மேலாளர் ராபர்ட் ஜாண் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றாலையில் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் முப்பந்தல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது காற்றாலையில் திருடிய பொருட்களை பழைய இரும்பு கடையில் விற்பதற்காக சென்ற ஆரல்வாய்மொழி மிஷன்காம்பவுண்டை சேர்ந்த ஜெகன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பெருமாள்புரத்தை சேர்ந்த பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்