செல்போன் கடையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

சின்னசேலம் அருகே கடையின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-03 18:45 GMT

சின்னசேலம்

செல்போன் கடை

சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தமிழ்செல்வன்(வயது 33). இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் செந்தமிழ்செல்வன் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பொருட்கள் திருட்டு

பின்னர் கடையில் இருந்த செல்போன்களை பார்த்தபோது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையில் துளைபோட்டு அதன் வழியாக உள்ளே புகுந்து அங்கிருந்த 4 செல்போன்கள், மெமரி கார்டு, புளூடூத் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன், தண்டபாணி, தனிப்பிரிவு ஏட்டு சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த செல்போன் கடையை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்