விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வராகபுரம் உச்சிமகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). இவருக்கும், புலவன்பட்டி நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த கிங்ஸ்டன் சத்தியமூர்த்தி (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் முன்பு நின்றபோது, அங்கு வந்த கிங்ஸ்டன் சத்தியமூர்த்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் தாயாரையும் அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளை காட்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து மாரிமுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிங்ஸ்டன் சத்தியமூர்த்தியை நேற்று கைது செய்தார்.