சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-04-15 23:25 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தந்தை கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், குட்டத்து ஆவாரம் பட்டி பகுதியை சேர்ந்த ஜக்குலின் ராபர்ட் ஸ்டீபன் மகன் லாரன்ஸ் (வயது 19) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் மீட்டு கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்படுத்தி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நல வாரியம் புகாரின் பேரில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்