சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.48 லட்சத்து 27 ஆயிரத்து 64-ம், 180 கிராம் தங்கமும், 464 கிராம் வெள்ளியும் கிடைத்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் ேபாது கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், பரம்பரை அறங்காவலர்கள், ராஜபாளையம் சரக ஆய்வாளர், கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.