சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 11 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.25 லட்சத்து 81 ஆயிரத்து 969-ம் கோசாலை உண்டியல் மூலம் ரூ.41 ஆயிரத்து 810-ம் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 614 என மொத்தம் ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்து 393 ரொக்கமும், 54 கிராம் தங்கமும், 255 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இதில் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், உதவி ஆணையர், செயல் அலுவலர் (கூ.பொ), பரம்பரை அறங்காவலர்கள், விருதுநகர் சரக ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 437 காணிக்கையாக கிடைத்தது. இந்த பணியில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.