கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது

Update: 2022-07-12 17:09 GMT

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது

இதில் 58 விவசாயிகள் 609 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது.

இதில், தாராபுரம், காங்கயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை ஏலம் எடுத்தனர். 155 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 72 ரூபாய் 50 காசுகள் முதல் 80 ரூபாய் 75 காசுகள் வரை ஏலம் போனது.

123 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 63 ரூபாய் 50 காசுகள் முதல் 69 ரூபாய்க்கு ஏலம் போனது. மழை காரணமாக கடந்த வாரத்தை விட கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1.60 குறைந்துள்ளது.

கடந்த வாரத்தை விட 263 மூட்டை கொப்பரை குறைவாக வந்தது என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்

மேலும் செய்திகள்