வசந்த உற்சவம் நிறைவு

கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு பெருமாள் நந்தவனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

Update: 2022-05-22 18:58 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்ச நரசிம்மர்களில் இரணிய நரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் இந்த கோவிலில் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வசந்த உற்சவம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை தொடர்ந்து, வசந்த உற்சவம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் கோவில் நந்தவனத்தில் எழுந்தருளினர். பின்னர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்