புகையிலை பொருட்கள் விற்றவர் பிடிபட்டார்

தியாகதுருகம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் பிடிபட்டார்

Update: 2023-06-11 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் கலையநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கலையநல்லூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜவேல்(வயது 66) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 550 மதிப்பிலான சுமார் 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்