இந்திய விளையாட்டு மையத்தில் சேர வீரர்கள் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடக்கிறது

இந்திய விளையாட்டு மையத்தில் சேர வீரர்கள் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடக்கிறது.

Update: 2023-08-20 19:15 GMT

இந்திய விளையாட்டு மையத்தில் சேர வீரர்கள் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடக்கிறது.

வீரர்கள் ேதர்வு

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மையத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சேர்வதற்கான தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதில் தடகளம், பளுதூக்குதல் (ஆண், பெண் இருபாலருக்கும்), குத்துச்சண்டை, கூடைப்பந்து (பெண்கள் மட்டும்), கையுந்துப்பந்து (ஆண்கள் மட்டும்) தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சாம்பியன்ஷிப் போட்டிகள்

தேர்வில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச சம்மேளனத்தால் எந்தவொரு சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியாவை பிரதிநி தித்துவப்படுத்தி 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் முதல் 6 இடங்களை பெற்றவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவர்கள், 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் நடந்த மாநில அளவிலான சாம்பியஷன்ஷிப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், மாவட்ட அளவிலான அரசு பள்ளிகள், சி.பி.எஸ்.இ., நவோதயா, கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மற்றும் கேலோ இந்தியா விளையாட்டுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற தனிநபர்கள் 12 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

பயிற்சி

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திட்டமிட்ட விஞ்ஞான ரீதியான பயிற்சி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.275-க்கு உணவு வழங்கப்படும். விளையாட்டிற்கு தேவையான உபகரணங்கள், போட்டிக்கான செலவினங்கள், கல்விக்கான செலவினங்கள், விபத்து மற்றும் மருத்துவக்காப்பீடு, மருத்துவச்செலவு ஆகிய செலவுகள் ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ.12 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் கலந்துகொள்ள விளையாட்டு வீரர்கள் விளையாட்டு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார், படிப்பு மற்றும் நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் மருத்துவச்சான்றிதழ் உண்மை நகல், 4 புகைப்படங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.

இந்த தகவலை மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைய பொறுப்பாளர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்