வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-08 13:18 GMT

பேரணாம்பட்டு

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பேரணாம்பட்டு டவுன் ஓங்குப்பம் ரோடு, குட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 24). ரவுடயான இவர் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு - வீ.கோட்டா ரோடு புத்துக் கோவில் சந்திப்பு சாலையில் ஆட்டோ டிரைவர் அசோக் ராஜ் என்பவரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு ரூ.9,500-ஐ மிரட்டி பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து ரவுடி மணியை கைது செய்தார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவுடி மணியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செயார். அதன் பேரில் ரவுடி மணியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி மணியிடம் வழங்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்