கூரை வீடு தீயில் எரிந்து நாசம்
கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது;
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் முத்தரையர் தெருவை சோ்ந்த அக்கினி மகன் ரமேஷ்(வயது 35). செங்கல் தொழிலாளி. இவரின் குடிசை வீடு நேற்று திடீரென தீப்பிடித்து எறிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீபத்தில் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டிற்கு நேரில் சென்று அரசின் நிவாரண உதவிகளை வழங்கியதுடன் சொந்த நிதி உதவியும் வழங்கினார். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினா் அங்குதன், ஊராட்சிதலைவர் எழிலரசி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவி எழிலரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் பல உடனிருந்தனா்.