குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

பொள்ளாச்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.

Update: 2023-09-21 19:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.

ஒன்றியக்குழு கூட்டம்

பொள்ளாச்சியில் தெற்கு ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் சண்முகசுந்தரம், ஆணையாளர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

மழை இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது. அணை மூலம் செயல்படுத்தப்படும் அம்பராம்பாளையம், கம்பாலப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

29 தீர்மானங்கள்

எனவே ஒன்றிய பொது நிதியில் வளர்ச்சி பணிக்கு செலவு செய்தது போக, மீதமுள்ள நிதியை குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒதுக்க வேண்டும். ரெட்டியாரூர் கிராமத்துக்கு காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பஸ், சாலை அமைக்கும் பணியால் நிறுத்தப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒன்றிய அதிகாரிகள் பேசும்போது, ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிகவும் மோசமான நிலையில் அரசு கட்டிடங்கள் இருந்தால் இடித்து அப்புறப்படுத்தப்படும். அதன்பிறகு கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்