வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்தார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Update: 2022-06-09 22:02 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ்காரர்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அடுத்துள்ள பழவூர் அருகே மாடம்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரவி செல்வன் (வயது 40). போலீஸ்காரரான இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உஷா (38) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

விஷம் குடித்தார்

நேற்று முன்தினம் ரவி செல்வன் ஒரு கடையில் விஷம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் யாருக்கும் தெரியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.

இதனை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து, ரவி செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்

ரவி செல்வனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம், பணம் வைத்து சீட்டு விளையாடும் பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதில் அவர், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்கு தெரியாமல் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரவி செல்வன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடக்கன்குளம் அருகே சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்