புறக்காவல் நிலையங்களை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரம்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் 17-ந் தேதி தொடங்கவுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த புறக்காவல் நிலையங்களை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2022-11-04 18:45 GMT

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் 17-ந் தேதி தொடங்கவுள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த புறக்காவல் நிலையங்களை சீரமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அய்யப்ப பக்தர்கள்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 17-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசன நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வார்கள். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடு

இந்த ஆண்டு சபரிமலை சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்கவுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு வசதியை மேம்படுத்த இங்கு உள்ள புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதாவது கன்னியாகுமரி காந்தி மண்டப பஜார், நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட், கடற்கரை சாலையில் உள்ள இலவச கார் பார்க்கிங் அருகில் மற்றும் சன்செட் பாயிண்டுக்கு செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் உள்ள புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து போ லீஸ் நிழற்குடை பராமரிப்பு பணியும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்