மகன் தற்கொலை முயற்சிமனமுடைந்து விஷம் குடித்த தொழிலாளி சாவு
திண்டிவனம் அருகே மகன் தற்கொலைக்கு முயன்றதால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஹரிஷ்(வயது 14). சம்பவத்தன்று இவன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டான். இதையடுத்து அவன் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் மனமுடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்து போனார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.