விஷம் குடித்த புதுப்பெண் சாவு

சின்னாளப்பட்டி அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-30 15:41 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் எபினேசர் (வயது 27). விவசாயி. இவருக்கும், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த நான்சி பிரியா (23) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. வயிற்றுவலியால் அவதிப்பட்ட நான்சி பிரியா, பெருமாள்கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.


இந்தநிலையில் வயிற்றுவலியால் மனம் உடைந்த நான்சி பிரியா, கடந்த 3 வாரத்துக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நான்சி பிரியா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நான்சி பிரியாவுக்கு திருமணமாகி, 6 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்