சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
வாணியம்பாடி அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், வெளிமாநில மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார். அதன்பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் தகரகுப்பத்தை அடுத்த தரைக்காடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.