முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-11 18:24 GMT

திருச்சி ஆழ்வார் தோப்பு இதயாத் நகரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவரது மகன் ஜபருல்லா (வயது 39). இவர் அந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர் தன் செல்போனில் அவசர எண் 100 -க்கு போன் செய்து, கடந்த ஆட்சியில் இலவச வேட்டி, சேலை கொடுத்தார்கள். இந்த ஆண்டு ஏன் தரவில்லை என்று சத்தம் போட்டார். மேலும் தமிழக முதல்-அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்து போனை துண்டித்து விட்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜபருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்