சாராயம் தயாரித்து விற்றவர் கைது
சாராயம் தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே வாராப்பூர் பகுதியில் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக செம்பட்டிவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாராப்பூர் ஊராட்சி நெருஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராய ஊறல் வைத்து பானையில் தயார் செய்துள்ளார். போலீசார் வருவதை பார்த்தும் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த 3 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய கணேசனை செம்பட்டி விடுதி போலீசார் கைது செய்து, அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைந்தனர்.