அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது
திருச்சுழி அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
திருச்சுழி,
திருச்சுழி அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
சுற்றுச்சுவர் விழுந்தது
திருச்சுழியில் சேதுபதி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில் சேதுபதி அரசு தொடக்கப்பள்ளி நுழைவுவாயில் அருகே உள்ள சுற்றுச்சுவர் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. மேலும் பள்ளி முடிந்த பின்பு நடந்த இந்த சம்பவத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பரபரப்பு
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-
திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு பள்ளி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு சில பள்ளிக்கட்டிடங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவரை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித் தரவேண்டும்.
மேலும் அரசு பள்ளி, நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப்பகுதியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.