மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

நீலகிரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2022-06-20 14:43 GMT

நீலகிரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இனிப்புகள் வழங்கினர்

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வை நீலகிரி மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 185 பள்ளிகளில் படித்த 3,540 மாணவர்கள், 3,680 மாணவிகள் என மொத்தம் 7,220 பேர் எழுதினர். இந்தநிலையில் நேற்று 10-ம் பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை தெரிந்துகொண்டனர்.

ஊட்டியில் மாணவிகள் பள்ளிக்கு சென்ற முடிவுகளை பார்வையிட்டு தெரிந்துகொண்டனர். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

19-வது இடம்

நீலகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,985 மாணவர்கள், 3,477 மாணவிகள் என மொத்தம் 6,462 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 89.5 சதவீதம் ஆகும். 84.3 சதவீதம் மாணவர்களும், 94.48 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 10.18 ஆகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் 19-வது இடத்தை பிடித்தது.

நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்