நிலையூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கால்வாயில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதன் கரையை பலப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-08-02 19:43 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கால்வாயில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதன் கரையை பலப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் 2- வது பெரிய கண்மாய்களாக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் அமைந்து உள்ளது. இதுதவிர பானாங்குளம் சேமட்டான் குளம், ஆரியங்குளம் குறுக்கிட்டான்குளம் ஆகிய கண்மாய்கள் விவசாயிகளின் முதுகெலும்பாக விளங்குகிறது. கனமழை பெய்யும் பட்சத்திலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நிலையூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலும் இந்த கண்மாய்கள்நிரம்பும். தற்போது கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது. இதற்கிடையே நிலையூர் கால்வாயில் மழையின் உபரி தண்ணீர் பெருக்கெடுத்து கண்மாய்களுக்கு சென்று வருகிறது.

பலவீனமான கரை

நிலையூர் கால்வாயின் கரையானது பல இடங்களில் சேதமடைந்து பலவீனமாக உள்ளது. அதனால் தண்ணீர் வெளியேறி கரையை ஒட்டி உள்ள குடியிருப்புகள் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகள் பாதிப்புக்குள்ளாகும். இதே சமயம் தரிசு நிலங்களுக்கு வீணாக தண்ணீர் செல்லும் என்று விவசாயிகள் இடையே அச்சம் நிலவுகிறது. வருகிற புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் மழை பெய்யகூடும். ஆகவே தற்போது பலவீனமான நிலையூர் கால்வாய் கரையை மேம்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்