பஸ், சரக்குவாகனம் அடுத்தடுத்து மோதியதால் மினி லாரி கவிழ்ந்தது

உளுந்தூர்பேட்டை அருகே பஸ், சரக்குவாகனம் அடுத்தடுத்து மோதியதால் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-06-09 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 40). இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி செல்வி(38), மகள்கள் சாதனா(12), ரித்திகா(8) ஆகியோருடன் மினி லாரியில் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன்(41) என்பவர் மினி லாரியை ஓட்டினார்.

நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டத்தூர் என்ற இடம் அருகில் வந்தபோது திடீரென மழை பெய்ததால் டிரைவர் மினி லாரியை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த அரசு விரைவு பஸ் மற்றும் கண்டெய்னர் லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதியதால் சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது.

4 பேர் படுகாயம்

இதில் டிரைவர் முருகன் மற்றும் மாரிமுத்து, செல்வி, மகள்கள் சாதனா, ரித்திகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்