மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-14 19:16 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை அருகில் சில வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது வழக்கமாக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தா.பழூர் சுத்தமல்லி சாலையில் வசித்து வரும் சின்னையன் மகன் சரண்ராஜ் (வயது 27) என்பவர் வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் 88 அரசு மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சரண்ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சரண்ராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். டாஸ்மாக் கடை அருகில் அதிக அளவில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதும், வாலிபர் கைது செய்யப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்