சேரன்மாதேவி:
சேரன்மாதேவி மாவடி தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 39). இவருடைய மனைவி செல்வி (24). இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி சுகுமார் அவரது மனைவியை அவதூறாக பேசி மண்வெட்டியால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். அப்போது அதனை தடுக்க வந்த செல்வியின் தாய் சரஸ்வதியையும் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுகுமாரை நேற்று கைது செய்தார்.