மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-10 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். சம்பவத்தன்று மூதாட்டி ஊருணியில் குளித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த முருகன் என்ற முத்துக்குமார் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தாராம்.

மேலும் மூதாட்டியின் உடையை பிடித்து இழுத்து அவதூறாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்