தாசில்தாரை கீழே தள்ளியவர் கைது
மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாரை கீழே தள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி தாசில்தாராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சிலட்டூர் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அறந்தாங்கி அருகே சிலட்டூர் தாந்தாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகளை மறித்து விசாரணை நடத்தினார். அப்போது மாட்டுவண்டி உரிமையாளர் தங்கராசு (வயது 48) என்பவர் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாசில்தாரை கீழே தள்ளி விட்டார். இதையடுத்து தங்கராசு உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாசில்தார் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராசுவை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.