பெண்ணிடம் நகை- பணம் மோசடி செய்தவர் கைது

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் நகை- பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-17 19:58 GMT

பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகர் பெஷன்ட் நகரை சேர்ந்தவர் ஜேசு அமுதன். இவர் பெங்களுருவில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஏஞ்சல் ஜெசி (வயது 39). இவரும், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (48) என்பவரும் குடும்ப நண்பர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொக்கலிங்கம் தொழில் தொடங்குவதாக கூறி ஏஞ்சல் ஜெசி மற்றும் அவரின் தந்தையிடம் சுமார் 20 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இதுகுறித்து சொக்கலிங்கத்திடம் ஏஞ்சல் ஜெசி கேட்டபோது, ஆத்திரம் அடைந்த அவர் ஏஞ்சல் ஜெசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்