போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைது

Update: 2023-02-07 19:30 GMT

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 22) என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு ஜெகநாதனின் தந்தை சக்திவேல் (50) வந்தார். பின்னர் அவர் அபராதம் விதித்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் தகராறு செய்தார். இதுதொடர்பாக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜராஜனை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்