பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-08-20 18:19 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அறிவழகன்(வயது 23). இவர் சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பர்னர் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது கோவிலம்பாக்கம் காந்திநகர் ராஜேஸ்வரி 4-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகள் மகேஸ்வரி (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சென்னை கோவிலம்பாக்கத்தில் இருந்த மகேஸ்வரியை, அறிவழகன் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமத்திற்கு அழைத்து வந்து உடையார்பாளையம் வேலப்பசெட்டி ஏரி அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த 18-ந் தேதி திருமணம் முடித்துள்ளார். இந்த விஷயம் பெண்ணின் வீட்டாருக்கும் தெரிய வரவே காதல் ஜோடிகள் இருவரும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்து இருவரையும் விசாரித்துள்ளனர் .அப்போது நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக திருமண ஜோடிகள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், எங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்ததுடன் அவர் அணிந்திருந்த கம்மல், தோடு, கொலுசு உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பிவிட்டனர். இந்நிலையில் புதுமண காதல் ஜோடிகள் இருவருக்கும் அறிவுரை கூறி அறிவழகனின் பெற்றோர்களுடன் இடையாறு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்