லாரி கவிழ்ந்து முதியவர் பலி

லாரி கவிழ்ந்து முதியவர் பலியானார்.

Update: 2023-04-09 19:00 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள கங்காகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 58). இவர் கடந்த ஒரு மாதமாக லாரி ஓட்டி வந்தார். இந்தநிலையில் எம்.துரைச்சாமிபுரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் சம்பவத்தன்று உடை கற்களை லாரியில் ஏற்றி விட்டு வந்த போது திடீரென நிலை தடுமாறி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கி பொன்னுச்சாமி பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்